Not all answers are found in Google | 用心感受世界 by Triden V Balasingam

இன்று “எல்லா கேள்விகளுக்கும் விடை கூகிளில் கிடைப்பதில்லை” எனும் கனடிய இயக்குனர் Triden பாலசிங்கம்  இயக்கிய சீன மொழி குறும்படம் YouTube இல் வெளியிடப்பட்டது. உலகை  COVID-19  சிறை பிடித்து வைத்திருக்கும் கால பகுதியில் தயாரிக்க பட்ட குறும்படம். பேரனும் பேத்தியும் என இரண்டு காதாபாத்திரங்களின் உரையாடல் வழியே இந்த தலைமுறை கைபேசியில் தொலைத்த  இயற்கை அழகு பற்றியும் அவர்கள் சேமிக்க தவறுகிற நினைவுகள் பற்றியும் சொல்கிறது. 





ஆரம்பத்தில் Japan சீனாவை ஆக்கிரமித்த பின் சீனாவின் வறுமை தோய்ந்த வரலாற்றை பேரன் இயற்கை நிறைந்த தெருவின் ஓரத்தில்  கைபேசியில் மூழ்கியிருந்த பேத்திக்கு சொல்வதிலிருந்து தொடங்குகிறது குறும்படம். சீனா செல்லவிருந்த பேரன் பேத்தியின் வரைகலை சித்திரங்களை நினைவாக பொதிசெய்கையில் பிரிவு பற்றி பேத்தியின் கவலையும். அதை தொடர்ந்து COVID-19 காரணமாக தடைப்பட்ட பயணமும் அதனால் மகிழும் பேத்தியும். அந்த உலக துயரத்திலும் அவர்களுக்கு வரமாக கிடைத்த காலத்தை இருவரும் எப்படி பயன்படுத்தினர் என்பது தான் மீதி திரையில் கவிதையாக.


உலக ஒழுங்கு மாறும் காலத்தில் சீன மொழியில் தமிழரின் குறும்படம் வருவது சிறப்பு. இதுவரை Holiwood ஐ அண்ணாந்து பார்த்து அதை கொண்டாடிய உலகும், இனி சீனாவின் திரை துறையை பார்க்க வேண்டியிருக்கும். தமிழரை பொறுத்தவரை தமிழ் சீன வணிக உறவு சோழர் அல்லது அதற்கு முந்திய காலத்தில் இருந்தே உண்டு. ஈழ தமிழரின் இறையாண்மையை பறித்த சிறிலங்கா, சீனாவின் உலக விரிவில் தம்மை இழக்கும் அதே நேரம் இந்தியாவுக்கு புதிய முள்ளாக தெற்கே இருக்கிறது. இந்தியாவினால் சீன தமிழர் உறவில் விரிசல் வராமல் இருக்க வேண்டியதும் ஒரு அவசியம். தமிழரால் சீன மொழி திரைப்படத்தை எடுக்க முடியும் என்பது காலத்தின் தேவை. கலைக்கு வரம்பில்லை ஆனால் கலைக்கு அரசியலை நகர்த்தும் வலிமையையும் உண்டு. ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்த கால தொடக்க உரையாடலை தவிர, படம் அரசியல் பேசவில்லை. 


வேல்








The film “Not all answers are found in Google”, which was entirely filmed during the Covid Pandemic lockdown, talks about how the young generation forgets about the environment and beautiful memories, while their life is immersed in mobile phones.

Comments

Popular posts from this blog

The future of Tamil Eelam history based movies

The Introduction of the United States H.Res.413 Resolution and the Tamil Diaspora

சீனா கொல்லையில் நின்றாலும் தமிழர் வரலாற்றை அழிக்க முனைப்பெடுக்கும் இந்தியா