Not all answers are found in Google | 用心感受世界 by Triden V Balasingam
இன்று “எல்லா கேள்விகளுக்கும் விடை கூகிளில் கிடைப்பதில்லை” எனும் கனடிய இயக்குனர் Triden பாலசிங்கம் இயக்கிய சீன மொழி குறும்படம் YouTube இல் வெளியிடப்பட்டது. உலகை COVID-19 சிறை பிடித்து வைத்திருக்கும் கால பகுதியில் தயாரிக்க பட்ட குறும்படம். பேரனும் பேத்தியும் என இரண்டு காதாபாத்திரங்களின் உரையாடல் வழியே இந்த தலைமுறை கைபேசியில் தொலைத்த இயற்கை அழகு பற்றியும் அவர்கள் சேமிக்க தவறுகிற நினைவுகள் பற்றியும் சொல்கிறது. ஆரம்பத்தில் Japan சீனாவை ஆக்கிரமித்த பின் சீனாவின் வறுமை தோய்ந்த வரலாற்றை பேரன் இயற்கை நிறைந்த தெருவின் ஓரத்தில் கைபேசியில் மூழ்கியிருந்த பேத்திக்கு சொல்வதிலிருந்து தொடங்குகிறது குறும்படம். சீனா செல்லவிருந்த பேரன் பேத்தியின் வரைகலை சித்திரங்களை நினைவாக பொதிசெய்கையில் பிரிவு பற்றி பேத்தியின் கவலையும். அதை தொடர்ந்து COVID-19 காரணமாக தடைப்பட்ட பயணமும் அதனால் மகிழும் பேத்தியும். அந்த உலக துயரத்திலும் அவர்களுக்கு வரமாக கிடைத்த காலத்தை இருவரும் எப்படி பயன்படுத்தினர் என்பது தான் மீதி திரையில் கவிதையாக. உலக ஒழுங்கு மாறும் காலத்தில் சீன மொழியில் தமிழரின் குற...