Posts

Showing posts from April, 2021

சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்

Image
  சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன் அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார். அறத்தோடுத்தான் மறவர்களை உருவாக்கினார். எந்த நிலையிலும் ஒழுக்க நிலைக்கு எதிராக எமது வீரர்கள் நின்றது கிடையாது. எப்போதும் தமது வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கத்தை அவர்கள் தகர்த்தெறிந்ததில்லை. எண்ணம், செயல் அனைத்தும் முழுக்க முழுக்க தமது மக்களின் மீட்புக்காக மட்டும் செயல்பட்டது. தமது மண்ணின் விடுதலையே அவர்களின் உயிர் மூச்சாய் இருந்தது. காயங்களை துச்சமென மதித்து, களத்திலே காற்றாய் சுழன்று வீசினார்கள். புரவிகளின் கால்களைவிட, எமது புலிகளின் கால்கள் அதிவேகத்தில் பறந்தது. உலக அரங்கிலே எமது தமிழ் தேசிய ராணுவத்தைப் போன்று வீரத்திலும், விவேகத்திலும் ஒன்று சேர நின்றவர்கள் ஒருவரும் கிடையாது. எந்த ஒரு ராணுவமானாலும், எந்த நாட்டின் மீது போர் தொடுத்தாலும் அந்த ...

தமிழர்களின் நடுகல் வழிபாடு

Image
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் எனும் பொருள் பட கனடாவில் பல சைவ ஆலயங்கள் கடந்த முப்பது ஆண்டுகாலத்தில் தமிழர்களினால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயங்களில் நாம் வழிபடும் கடவுள் திருவுருவங்கள் அநீதியை எதிர்த்து நீதிக்காக போராடியதாக உருவகப்படுத்தபடுகிறது. எமது பண்டைய வழிபாட்டு முறைகளும் இயற்கையுடன் சேர்ந்தே இருந்தன. பின்னர் இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் பண்டைய நடுகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. தமிழர்கள் நாட்டுக்கு உழைத்த, தாம் சார்ந்த மக்களை காக்க போராடி வீழ்ந்த நல்லவர்களை கடவுளாக கண்டதன் வெளிப்பாடே நடுகல் வழிபாடாக கொள்ளலாம். தமிழர்களின் நடுகல் வழிபாடு சங்க காலத்திற்கு அல்லது அதற்கு முன்னர் தொடக்கம் இருந்ததாக அறியப்படுகிறது. இதற்கான சான்றுகள் புறநானூறு சிலப்பதிகாரம் மற்றும் பல தமிழ் இலக்கியங்களில் உள்ளன.  ஈழத்திலும் தமிழகத்திலும் பல கோவில்களில் உருவக வழிபாடாக சூலம், வேல் மற்றும் சிவலிங்க வழிபாட்டு முறைகளும் நெடும் காலமாக உள்ளன. தமிழ் மொழி போலவே, தமிழர்களின் வழிபாட்டு முறைகளும் நீண்ட வரலாற்றையும் மரபையும் கொ...