தமிழீழக் காவல்துறையினரின் சீருடைகள் மற்றும் அணிகலங்கள்
சீருடை (Uniform):-
தமிழீழக் காவற்றுறையின் அதிரடிப்படை தவிர்ந்த ஏனைய பிரிவுகளின் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான நிறம் கொண்ட ஆடையினையே உடுத்தியிருந்தனர்.
ஆண்:-
முழுக் காற்சட்டை (full pant)- கடுநீலம்
முழுக்கை & அரைக்கைச் சட்டை - இளநீலம்
பெண்:-
முழுக் காற்சட்டை - கடுநீலம்
முழுக்கை & அரைக்கைச் சட்டை - இளநீலம்
→ தமிழீழக் காவற்றுறையில் யார் முழுக்கைச் சட்டை அணிவார்கள்? யார் அரைக்கைச் சட்டை அணிவார்கள்? என்று எனக்குத் தெரியாது. ←
→ ஆண்களும் பெண்களும் மேற்சட்டையில் மூன்று தெறிகள்(button) மட்டுமே வெளியில் தெரியுமாறு மேற்சட்டை அணிந்திருந்தனர்.
→ இருபாலரினதும். மேற்சட்டையில் நான்கு பக்குகள்(pocket) இருந்தன. அவற்றின் நடுவிலே பூட்டுவதற்கு ஒரு தெறி(button) இருந்தது. முழுக் காற்சட்டையின் பின்பக்கத்தின் பிட்டத்தில் இரு பக்குகள் இருந்தன.
தமிழீழக் காவற்றுறையின் ஆண் & பெண் காவலர்கள் அனைவரும் 1996 வரை இருவேறு விதமான தொப்பிகளை(cap) அணிந்திருந்தார்கள். அவை ஆவன
ஒரு பக்கக் தொப்பி(one side cap) - பெண்கள்
ஆனால் அக்காலத்தில் இவர்களின் உயர் அலுவலர்கள்(higher officers) யாவரும் சுற்றுக்காவல் தொப்பியினையே அணிந்திருந்தனர்.
முழுக்கை:-
'யாழில் படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள பெண் காவலர்'
அரைக்கை:-
'யாழில் SLR கொண்டு படைத்தகையில் ஈடுபட்டுள்ள பெண் காவலர் | வலது பக்க ஓரத்தில் நன்கு உத்துப் பாருங்கள், அரைக்கைச் சட்டையும் குணகு மகுடக்கவியும் அணிந்த இரண்டு ஆண் காவலர்களும் தெரிகின்றனர்'
இதன் பக்கவாட்டு நடுப்பகுதி சரியரைவாசியாக பிரிக்கப்பட்டு அதில் ஓர் வில்லை(badge) தைக்கப்பட்டிருக்கும். அது இரு பகுதியாக்கப்பட்டு ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் அதில் பூசப்பட்டிருக்கும். சிவப்பு மேற்பக்கத்திற்கும் மஞ்சள் கீழ்ப்பக்கத்திற்கும் பூசப்பட்டிருக்கும்.
குணகு மகுடக்கவி(Slouch hat) - ஆண்கள்
ஆனால், அக்காலத்தில் இவர்களின் உயர் அலுவலர்கள் யாவரும் சுற்றுக்காவல் தொப்பியினையே அணிந்திருந்தனர். ஆனால், அக்காலத்தில் இவர்கள் அணிந்திருந்த இடைவாரின் நிறம் கறுப்பு ஆகும்.
முழுக்கை:-
'யாழில் SLR கொண்டு படைத்தகையில் ஈடுபட்டுள்ள ஆண் காவலர்'
அரைக்கை:-
'யாழில் SLR கொண்டு படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள ஆண் காவலர்களை உண்ணோட்டமிடும்(inspection) புலித் தலைவர் வே. பிரபாகரன், காவற்றுறை பொறுப்பாளர் ப.நடேசன், படைத்துறை வியவர்களான(Military Commanders) ஜெயம்(வ) & சொர்ணம்(இ) மற்றும் காவற்றுறை உயர் அலுவலர்(ஈ)* '
*ஈ- ஈற்று
இக்குணகு மகுடக்கவியின் சுண்டிற்கு(bill) அண்டவாக ஓர் வில்லை தைக்கப்பட்டிருக்கும். அது இரு பகுதியாக்கப்பட்டு ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் அதில் பூசப்பட்டிருக்கும். சிவப்பு மேற்பக்கத்திற்கும் மஞ்சள் கீழ்ப்பக்கத்திற்கும் பூசப்பட்டிருக்கும்.
96 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலத்தில் ஆண்காவலரும் பெண்காவலரும் இரு வகையான தொப்பிகள்(caps) அணிந்திருந்தார்கள்.
கடுநீல வரைகவி(beret)
'கிளி. காவற்றுறை நடுவப்பணியகத் திறப்பு விழாவில் கடுநீல 'வரைகவி ' அணிந்து T-56 கொண்டு சீராக நிற்கும் காவலர்'
இக்கவியணிந்தோர் பணி யாதென்று நானறியேன். அறிந்தவர் புலனம் கொடுத்து உதவவும். _/\_
இவ் வரைகவியில் வில்லையில்லை. வில்லையானது இடது நெற்றிற்கு மேல் இருந்தது.
கடுநீல சுற்றுக்காவல் தொப்பி(patrol cap)
இவை புலிகளிற்கே உரித்தான தொப்பிகளாகும்(caps)
முன் பக்கப் பார்வை:
பக்கவாட்டுப் பார்வை
இந்த தொப்பியின் பக்கவாடுகளில் இரு கண்ணிகள் (eyelets) இருக்கும். இவர்களுடைய தொப்பியின் [வரைகவி(Barret) நீங்கலாக] சுண்டிற்கு(bill) நெருக்கமான மேற்புறத்தில் வில்லை ஒன்று சுற்றிவரக் தைக்கப்பட்டிருக்கும். அது மூன்று பகுதியாக்கப்பட்டு மேலும் கீழும் சிவப்பாகவும் நடுவில் ஒக்க வெளிறிய மஞ்சளாகவும் இருந்தது. இந்நிறங்கள் குறித்து நிற்கும் பொருள் பற்றி நான் அறியேன்(unknown). இவை சில வேளை ஈழத்தமிழரின் மஞ்சள் சிவப்பு நிறங்களை குறித்தனவாக இருக்கலாம் என்பது என் துணிபு.
இதை தொப்பியின் இரு பக்கவாட்டிலும் இருந்து தொடங்கி பிற்பகுதி முழுதும் மூடிமறைக்கும் விதமாக, தேவைப்பட்ட இடத்தின் அடிப்பகுதியில் இருந்து மேனோக்கி தொப்பியில் 33% கொள்ளும் வகையில் ஓர் துணியானது தைக்கப்பட்டு அது மேன்னோக்கி மடிக்கப்பட்டு தொப்பியூசி(அதான் தொப்பி ஊசி) கொண்டு இருபக்கத்திலும் குத்தப்பட்டிருக்கும். குத்தப்பட்ட இடம் சொண்டு(bill) தொடங்கும் இடமாகும்.
இதன் சொண்டானது புலிகளின் படைத்துறை சுற்றுக்கவல் தொப்பி(military patrol cap) போல நன்கு தட்டையாகவும் உலகளாவிய சுற்றுக்கவல் தொப்பி போன்றல்லாமல் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கிறது. இதன் பலகம்(panel) மிகவும் விறைத்தது(stiff) ஆகும்.
வில்லை - Badge
பொதுவாக அனைத்துக் தொப்பிகளின் முன்பக்கத்திலும் இந்தப் வில்லையின் மையத்தின் மேற்பகுதியில் கொஞ்சமாக தொடும்படியாக காவற்றுறை வில்லையினைக் (badge) குத்தியிருப்பார்கள். அது வெள்ளியால் ஆனது ஆகும்.
தலைச்சீரா - Helmet
போக்குவரத்துக் காவலர்கள் இரு விதமான தலைச்சீராவினை அணிந்திருந்தனர்.
விதம் - 1
'அருகில் நடந்து செல்பவர்கள் கிளி. மத்திய கல்லூரி மாணவர்கள்'
விதம் - 2
இந்த தலைச்சீராவின் முன்பகுதியில் 'Police' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.
அலகு வில்லை - Unit Badge
இருபாலரும் இருபுயத்திலும் அணிந்திருந்தனர்.
எண் தகடு
இதை,
→பெண்கள் தங்களின் இடது & வலது தோள்மூட்டில் உள்ள தோள் மணையில் இதைக் குத்தியிருப்பர்.
→ஆண்கள் வலது மார்பில் பக்கிற்கு(pocket) மேலே குத்தியிருப்பர்.
ஆண்கள் பெண்களைப் போலல்லாமல் வெறும் எண்களை மட்டுமே குத்தியிருந்தனர்.
'பெண்கள் குத்துவது'
காவற்றுறை சீக்காயி - Police whistle
இருபாலரும் இடது பக்கத் தோளில் காவற்றுறைக்கே உரித்தான கயிறுமூலம் அதை கட்டி இடது பக்க பக்கிற்குள்(pocket) வைத்திருப்பர்.
தோள் மணை - Shoulder board
பெண் அலுவலர்கள் தோளில் கடுநீல நிற தோள் மணை அணிந்திருப்பர்.
ஆண் அலுவலர்கள் ஏதும் அணியார்
மேல் அலுவலர்களில்(Superior officers) இருபாலரும் தோள் மணை அணியார்.
ஆனால் தோள் மணை இருக்கும் இடத்தில் உள்ள துண்டத்தின்(piece of cloth) மேல் ஒன்று, இரண்டு, மூன்று என்று பதவிக்கேற்ப அறுமுக தாரகைகள் குத்தியிருந்தனர். அத்தாரகையின் நடுவே தட்டையான கூம்பு ஒன்று இருந்தது.
கைத்துப்பு தடறு - Pistol Holster
இதை உயர் & மேல் அலுவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மட்டுமே அணிந்திருந்தனர். இதை இவர்கள் இடுப்பில் கட்டுவார்கள். இதற்காக ஒரு வார் ஒன்றினை வலது பக்கத் தோளின் துண்டத்தில் இருந்து நெஞ்சிற்குக் குறுக்காக தடறின் மூடியோடு இணைத்திருப்பர்.
இடைவார் - Belt
96 வரை:
ஆண்கள் - கறுப்பு நிறம்
இவர்களின் இடைவாரினை உள்ளுடுத்துவதற்கு குதைகளிற்கு(loop) பகரமாக தெறிகள்(buttons) கொண்ட ஓர் சிறிய துண்டம்(piece of cloth) முழுக் காற்சட்டையின் இடைவார்ப் பகுதியில் தைக்கப்பட்டிருக்கும். அந்த இடைவாரில் இரு கவர்கள்(prong) இருந்தன. அதைத் திறந்து மூடலாம். இவ்வாறுதான் படைத்துறைக்கும் தைக்கப்பட்டிருந்தது. இது புலிகளின் பாணி!
பெண்கள் - வெள்ளை நிறம்
ஆண்களிற்குத் தைக்கப்பட்டிருந்ததைப் போன்ற துண்டங்கள், பெண்களிற்குத் தைக்கப்படவில்லை, மாறாக குதைகள்(loops) தைக்கப்பட்டிருந்தன. அது பலவாக இல்லாமல் மேற்சட்டையின் இருபக்க சள்ளையிலுமாக(இறைக்கு மேலிருக்கும் பக்கவாட்டு தசை மிகு பகுதி) மொத்தம் இரண்டு தைக்கப்பட்டிருந்தது. இது இடைவாரினை கீழிறங்காமல் உரிய இடத்தில் வைத்திருக்க உதவியது. அந்த இடைவாரில் இரு கவர்கள் இருந்தன.
'யாழில் SLR கொண்டு படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை உண்ணோட்டமிடும்(inspection) புலித் தலைவர் வே. பிரபாகரன், காவற்றுறை பொறுப்பாளர் ப.நடேசன்(இ), படைத்துறை வியவரான(Military Commander) சொர்ணம் (வ) மற்றும் காவற்றுறை உயர் அலுவலர்(பி) '
96 இல் இருந்து:
ஆண்கள் - கடுநீல நிறம்
இவர்களின் இடைவாரினை உள்ளுடுத்துவதற்கு குதைகளிற்கு(loop) பகரமாக தெறிகள்(buttons) கொண்ட ஓர் சிறிய துண்டம்(piece of cloth) முழுக் காற்சட்டையின் இடைவார்ப் பகுதியில் தைக்கப்பட்டிருக்கும். அந்த இடைவாரில் இரு கவர் இருந்தது. அதைத் திறந்து மூடலாம். இவ்வாறுதான் படைத்துறைக்கும் தைக்கப்பட்டிருந்தது.
'போக்குவரத்துக் காவலர் கதுவீ சுடுகலன் (RADAR Gun) கொண்டு வேகத்தை அளவிடும் காட்சி | '
பெண்கள் - வெள்ளை நிறம் & கடுநீல நிறம்
→அலுவலர் - வெள்ளை நிறம்
→உயர் அலுவலர்(Higher officers) - கடுநீல நிறம்
ஆண்களிற்குத் தைக்கப்பட்டிருந்ததைப் போன்ற துண்டங்கள், பெண்களிற்குத் தைக்கப்படவில்லை, மாறாக குதைகள்(loops) தைக்கப்பட்டிருந்தன. அது பலவாக இல்லாமல் மேற்சட்டையின் இருபக்க சள்ளையிலுமாக(இறைக்கு மேலிருக்கும் பக்கவாட்டு தசை மிகு பகுதி) மொத்தம் இரண்டு தைக்கப்பட்டிருந்தது. இது இடைவாரினை கீழிறங்காமல் உரிய இடத்தில் வைத்திருக்க உதவியது. அந்த இடைவாரில் இரு கவர்கள்(prong) இருந்தது.
'பணிக்குச் செல்ல முன் உறுதியேற்கும் பெண் காவலர். இது தமிழீழ காவற்றுறை வழக்கம்'
சப்பாத்து(Shoe):
படைத்துறையினைச் சார்ந்தவர்கள் அணியும் சண்டைச் சப்பாத்திற்கு(combat shoe) மாற்றாக சாதாரண சப்பாத்தினை அணிந்திருந்தார்கள்.
பெண்கைளின் தலைமயிர்:
இவர்கள் புலிகளின் படைத்துறையில் இருந்த பெண்களைப் போலல்லாமல் தங்கள் தலைமயிரை வேறுபட்ட விதத்தில் இதோ இப்படித் தூக்கிக் கட்டியிருந்தனர்:
ஆண்களின் தலைமயிர்:
இவர்களும் புலிகளுக்கே உரித்தான விதத்தில் படைத்துறையில் பணியாற்ற்றும் ஆண்களைப் போலவே மயிர் வெட்டியிருந்தனர்.
உந்துருளி - Motor bike
இவர்கள் வெள்ளை நிற 'கீரோ கொண்டா பாசன்(Hero Honda passion)' உந்துருளியினைப் பயன்படுத்தினர்.
அவற்றில் காற்றுத்தட்டியும் பொருத்தப்பட்டிருந்தது.
'தமிழீழக் காவற்றுறை உந்துருளியின் பக்கவாட்டுப் பார்வை'
ஊர்திகள்:
அவை பிக்அப், பஜரோ, கண்டர் என்று பற்பல விதமானவை. இவற்றின் நிறங்கள் வெள்ளை அல்லது கடு நீலத்தில் இருந்தன.
காவற்றுறை சிறப்பு அதிரடிப்படை (Police Special Commando)
இவர்கள் கீழ்க்கண்ட நிறத்திலான உடையினை அணிந்திருந்தனர்
'படிமப்புரவு: வேசுபுக்கு'
இவர்களின் பெண்கள் பிரிவினர் படத்தில் தெரிவது போன்ற ஒரு வித பச்சை நிறத்திலான இடைவாரினை அணிந்திருந்தனர். காவற்றுறை சிறப்பு அதிரடிப்படையினரின் தொப்பியும் கொஞ்சம் வேறுபாடானது. இவர்கள் அணிந்திருந்த தொப்பியும் காவற்றுறை சுற்றுக்காவல் தொப்பி போன்றல்லாமல் அதனினின்று வேறுபட்டு அமெரிக்க சுற்றுக்காவல் தொப்பியுடனான ஒத்த தோற்றத்தைக் கொண்டிருந்தது.
'காவற்றுறை சிறப்பு அதிரடிப்படை'

Comments
Post a Comment