தமிழர்களுக்கு சோழ மன்னரின் ஆட்சிக்கு பின்னர் ஒரு மாவீரனாக விடுதலை வீரனாக சிறந்த தலைவராக மேதகு என்று பெயருக்கு பொருத்தமான தமிழ் தலைவர் பிரபாகரன். பிரிட்டிஷ் காரர் ஈழம் வருமுன்னர் தமிழ் சிங்களம் என மன்னராச்சி முறை இருந்தது. பிரிட்டிஸ்காரர் அதை இணைத்து சிலோன் என்று பெயரிட்டு ஆண்டனர். பின்னர் 1948 இல் அவர்கள் செல்லும் போது தமிழருக்கு ஆட்சி உரிமைகளை கொடுக்காமல் பெரும்பான்மை சிங்களவரிடம் அதை விட்டு சென்றனர். பின்னர் சிங்களவர்கள் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து தமிழருக்கு எதிரான இன அழிப்பிலும் ஈடு பட்டனர். முப்பது வருட கால அற வழி போராட்டங்கள் சிங்கள சிறிலங்கா அரசால் வன்முறை கொண்டு அடக்கப்பட தமிழர்கள் வேறு வழியின்றி 1976 இல் தமிழீழம் எனும் தனிநாடு தான் தமக்கு தீர்வு என்று மக்களாட்சி முறையில் தீர்மானித்தனர். ஆனால் ஒரு படையை கட்டியெழுப்பும் வலு அவர்களுக்கு இருக்கவில்லை. பிரபாகரன் 1976 இல் தமிழீழ விடுதலை புலிகள் எனும் அமைப்பை நிறுவினார். ஆனால் 1983 இல் தமிழீழ விடுதலை புலிகளில் முப்பதிற்கும் குறைவான உறுப்பினர்களே இருந்தனர்.

பல தமிழ் ஆயுதக்குழுக்கள் மிக பல உறுப்பினர்களுடன் 1980 களில் இருக்கையில் புலிகள் மிக குறைந்த உறுப்பினர்களையே 1986 வரை கொண்டிருந்தனர். ஆனால் அதி உச்ச அறம் சார் கட்டுப்பாடுகளை கொண்டிருந்தனர். சிறிலங்காவின் தமிழின அழிப்புக்கு எதிராக போராடியதில் புலிகள் தான் அதிக இராணுவ தாக்குதல்களை நடத்தியிருந்தனர். பின்னர் தியாகி திலீபனின் இந்திய அரசுக்கு எதிரான காந்தீய உண்ணாவிரதம் தோற்றபின் புலிகள் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்தும் போர்புரிந்தனர். 1990 இல் தமிழீழம் என்ற நாட்டை நிறுவினர். அந்த நாட்டை முப்படைகளையும் நிறுவி பன்னிரண்டு வருடங்கள் தமிழர்களை காத்தனர். தமிழரின் இறையாண்மையை பிரிட்டிஷ் காலத்தின் பின் மீட்டு எடுத்ததும் புலிகள் தான். அதை தலைமை தாங்கியவர் பிரபாகரன். பின் 2002 இல் பன்னாட்டு சமாதான பேச்சுக்களில் பங்கேற்று 2004 ஒரு இடைக்கால அரசியல் தீர்வையும் முன்வைத்தனர். தமிழீழத்தை முழுமையாக ஒரு தட்சார்பு நாடக அமைத்தனர். வங்கி, காவல்துறை, நீதி மற்றும் நிர்வாகம் போன்ற எல்லா அங்கங்களும் அங்கு இருந்தன. 2009 இல் உலகின் பல நாடுகளும் தமிழின அழிப்பை பொருள்படுத்தாது சிறிலங்காவுக்கு ஆதரவு அளிக்க,
இந்த தமிழீழ அரசு அழிந்து போனது. புலிகளும் மாண்டு போயினர். தலைவர் பிரபாகரனும் மறைந்தார்.
மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா சிறிலங்கா அரசுக்கு ஆதரவளித்த போதும், பின்னர் சிறிலங்கா சீனா பக்கம் போய் சேர்ந்து விட்டது. புலிகள் அழிந்த பின் சிறிலங்கா அரசி பல ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது. ஐநா போன்ற உலக அமைப்புகளும் இதை இனஅழிப்பு போர்க்குற்றம் என்று ஆவணப்படுத்தியுள்ளன. சிறிலங்காவின் இன அழிப்பு புலிகள் 2009 இல் அழிந்த பின் வேகம் கொண்டு இன்று ஈழத்தில் கிழக்கு மாகாணத்தை சிங்களரிடம் இழந்தது போன்று வடக்கு மாகாணத்தையும் இழந்த படி உள்ளனர். ஒரு தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தியதுடன் அறம் சார் தமிழீழ நாட்டிடை உருவாக்கிய பிரபாகரனை இன்றும் தமிழர்கள் தெய்வம் போன்று வணங்குகின்றனர்.
Comments
Post a Comment