தமிழீழ வரலாற்று ஆவணங்களை அழிப்பது ஏன் என்று Facebook இன்னமும் தெளிவான விவரங்களை தெரியப்படுத்தவில்லை.

 2020 இல் Facebook நிறுவனம் தமிழீழ அரசின் மற்றும் உலக தமிழர்களின் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வரலாற்று காணொளிகள், படங்கள் ஆவணங்களை அழிக்க முயன்றதால், 2021 இல் Facebook ஐ சமூக வலை தளமாக பாவிக்காமல் ஒரு பதிவிடும் தளமாக மட்டும் பாவிக்க உள்ளேன். Facebook இல் பதிவிடும் எனது அனைத்து பதிவுகளை Google Blogger தளத்திலும் மற்றும் இன்னும் இரு தளங்களிலும் சம நேரத்தில் பிரதி செய்ய கூடிய வகையில் செய்யலாம்.

தமிழீழ வரலாற்று ஆவணங்களை அழிப்பது ஏன் என்று Facebook இன்னமும் தெளிவான விவரங்களை தெரியப்படுத்தவில்லை.
தமிழர் வரலாற்றில் எது தேவை என்பதை Facebook நிறுவனம் தீர்மானிக்க முடியாது. பயனர்களின் தரவுகளை வைத்து தான் Facebook இன்று Trillion dollar நிறுவனமாக விளம்பரங்களில் வருமானம் ஈட்டுகிறது. கடந்த மாவீரர் வாரத்தில் Facebook நிறுவனம் பாரிய தடைகளை தமிழர் மீது போட்டது. இந்த 2021 வருடத்தில் நாம் போதிய முயற்சி எடுத்தால் Facebook நிறுவனத்திற்கு தமிழரின் வரலாற்றை அழிப்பது பிழை என்பதை புரியவைக்கலாம். Facebook தடைகளை மேவி செய்ய பதிவுகளை சமநேரத்தில் மாற்று தளங்களிலும் பதிவிடலாம். இந்த வருடம் Facebook பயன்பாட்டில் மாற்றங்களை செய்வதன் மூலம் தமிழர் வரலாறு அழிக்கபடுவதை ஓரளவாவது தவிர்க்க முடியும்.
கீழுள்ள இணைப்பு எனது Google Blogger. இரண்டும் சமநேரத்தில் பயன்பாட்டில் 2021 பேணப்படும். Facebook அழிக்கும் பதிவுகள் Google Blogger இல் இருக்கும். Google உம் அழித்தால் இன்னும் ஒரு இணைய தளம் தமிழருக்காக ஏற்படுத்தும் முயற்சியில் உருவாக்கும் சாத்தியம் நிறைய உள்ளது. அடிப்படையில் தமிழர் வரலாற்றில் தமிழீழ வரலாறு ஒரு முக்கிய பக்கம், அதை நீக்கி தமிழர் வரலாறு இல்லை.

Comments

Popular posts from this blog

The future of Tamil Eelam history based movies

The Introduction of the United States H.Res.413 Resolution and the Tamil Diaspora

சீனா கொல்லையில் நின்றாலும் தமிழர் வரலாற்றை அழிக்க முனைப்பெடுக்கும் இந்தியா